ஜெயலலிதாவைப் போல் எந்தப் பெண்ணும் அவமானப்படக் கூடாது: விஜய்
#India
#Women
#LANKA4
#Vijay
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
3 hours ago
சட்டப்பேரவையில் பதிலுரையாற்றிப் பேசிய முதலமைச்சர் விஜய், சட்டமன்றத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நாகரிக அரசியல் குறித்துப் பேசியுள்ளார்.
இதே சட்டப்பேரவையில், இங்குள்ள எதிர்க்கட்சியால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக எவ்வளவு அவமானங்களைச் சந்தித்துள்ளார் என்பதைக் கேள்விப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
அதுபோன்று இனி எந்தப் பெண்ணும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
நாகரிகம் வளர்ந்து கொண்டே இருக்கும் சூழலில் அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம் எனக் கூறிய அவர், பேரவையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக 'எலும்பை உடைப்பேன்' என்று பேசுவதெல்லாம் எதற்கு என்றும், இதுதான் அரசியலா என்றும் கேள்வி எழுப்பினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே