ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணிநேர வேலைநிறுத்தம்!
செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
ரயில்வே திணைக்களத்தில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்:
• ரயில்வே பொது மேலாளரை உடனடியாக பதவி நீக்குதல்.
• தொழிற்சங்கத் தலைவர் ஒருவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகளை கைவிடுதல்.
ரயில்கள் தாமதம் மற்றும் இரத்து செய்யப்படுதல், பயணிகள் நெரிசல், போதிய சேவை வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தற்போதைய நிர்வாகத்தின் செயற்பாடுகளே காரணம் என தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், அனைத்து ரயில்வே தொழிற்சங்கங்களும் இணைந்து கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும் எச்சரித்துள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே