எல் நினோ பாதிப்பை எதிர்கொள்ள மாவட்ட மட்டத்தில் முக்கிய நடவடிக்கைகள்!
எல் நினோ மற்றும் எதிர்வரும் வறட்சி நிலைமையை எதிர்கொள்வது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் துறைசார் அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
🔹 குடிநீர் விநியோகம்:
வறட்சி அதிகரிக்கக்கூடிய பகுதிகளை உடனடியாக அடையாளம் கண்டு, அப்பகுதிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடிநீர் தேவைக்காக இரணைமடுக் குளத்தில் போதியளவு நீர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔹 பெரும்போகச் செய்கை:
இரணைமடுக் குளத்தின் தற்போதைய நீர்மட்டத்தின் அடிப்படையில், மழைக்கு முன்னர் விதைப்பை ஆரம்பித்தால் இரு தடவைகள் நீர்ப்பாசனம் வழங்கக்கூடியளவு நீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்போகச் செய்கைக்கான திகதிகளை தீர்மானிக்க அடுத்த வாரம் விவசாய மற்றும் பயிர்ச்செய்கைக் குழுக் கூட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
🔹 காட்டுத் தீ கட்டுப்பாடு:
மாவட்டத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ பரவலைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் மற்றும் வனவளத் திணைக்களம் இணைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
நீர்ப் பவுசர்கள் மற்றும் தெளிப்பான்கள் உள்ளிட்ட தேவையான உபகரணங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எல் நினோ மற்றும் வறட்சியை எதிர்கொள்ள குடிநீர், விவசாயம் மற்றும் காட்டுத் தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே