பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி?

#SriLanka #Parliament #Airport #Development #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்புத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த பலாலி சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பில் நாடாளுமன்றத்தில் பல முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரிடம் கேள்விகளை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா வழங்கியுள்ள நிதி உதவி, நிறைவு செய்யப்பட்டுள்ள சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் வடிவமைப்புகளுக்கு மத்தியில், திட்டம் தாமதமடைவதற்கான காரணம் என்ன என கேள்வி எழுப்பினார்.

மேலும், பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்தின் தெளிவான கொள்கை மற்றும் எதிர்காலத் திட்டம் என்ன என்பதையும் அவர் வினவினார்.

பலாலி விமான நிலையத்தை மத்தள விமான நிலையத்துடன் ஒப்பிடுவது தொடர்பிலும் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

பலாலி விமான நிலையம் பயணிகள் போக்குவரத்து இடம்பெறும் வணிக ரீதியான விமான நிலையம் என சுட்டிக்காட்டிய அவர், மத்தள விமான நிலையத்துடன் அதனை ஒப்பிட முடியாது என தெரிவித்தார்.

அத்துடன், லண்டன்–யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் காரெத் தோமஸ் முன்வைத்த யோசனை குறித்தும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை மற்றும் முனைய அபிவிருத்திக்கு தேவையான காணிகள் விமான நிலைய வளாகத்திற்குள்ளேயே உள்ளதாகக் கூறப்படும் நிலையில், மேலதிக தனியார் காணிகளை கையகப்படுத்துவதற்கான அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. 

பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை மீண்டும் கையகப்படுத்துவதற்குப் பதிலாக, அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதனுடன், மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம், திருகோணமலை துறைமுகம் மற்றும் தலைமன்னார்–இராமேஸ்வரம் படகு சேவை தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்கள், சாத்தியக்கூறு ஆய்வுகள், நிதி ஏற்பாடுகள் மற்றும் காலக்கெடு குறித்தும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக சுமார் 62 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நிதி வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், அந்த நிதியைப் பயன்படுத்தி அபிவிருத்திப் பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த துறைமுக அமைச்சர் அநுர கருணாதிலக, எழுப்பப்பட்ட சில விடயங்களை தாம் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்ததுடன், கேள்விகளுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரினார்.

அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க வடக்கிற்கு விஜயம் செய்தபோது தாமும் அவருடன் இருந்ததாகவும், யாழ்ப்பாணத்தில் அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாது என்றோ, பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாது என்றோ அவர் தெரிவிக்கவில்லை எனவும் கூறினார்.

மேலும், பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4