இலங்கைக்கு அருகில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி விலகிச் செல்வதாக அறிவிப்பு -வானிலையில் மாற்றம்
இலங்கைக்கு அருகிலுள்ள தாழ்நிலை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாட்டில் இருந்து விலகிச் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, அதன் தாக்கம் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இப்பகுதிகளில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ. வரை மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும்.
அதேபோல் ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.