34 அமெரிக்க அமைதிப்படை தன்னார்வலர்கள் இலங்கை வருகை
#SriLanka
#LANKA4
#Peace
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Riya
4 hours ago
இலங்கையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றவுள்ள அமெரிக்க அமைதிப்படையின் 34 புதிய பயிற்சி தன்னார்வலர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள உறுதிமொழி ஏற்பு நிகழ்வுக்கு முன்னதாக, சிங்களம் அல்லது தமிழ் மொழி, இலங்கை கலாசாரம் மற்றும் ஆங்கிலக் கற்பித்தல் தொடர்பான பயிற்சிகளை அவர்கள் பெறவுள்ளனர்.
உறுதிமொழி ஏற்பு நிகழ்வைத் தொடர்ந்து, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இலங்கை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து ஆங்கிலக் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.
இலங்கையில் அமெரிக்க அமைதிப்படையின் சேவை 1962ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், 2018ஆம் ஆண்டு ஆங்கிலக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து மீண்டும் செயற்படுத்தப்பட்டது.