கேகாலையில் விருந்தகமொன்றில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்
#SriLanka
#Police
#Kegalle
#LANKA4
#GunShoot
#Injury
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
5 hours ago
கேகாலை நகரிலுள்ள விருந்தகம் ஒன்றில், அதன் ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (18) இரவு இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வின்போது ஏற்பட்ட தகராறு காரணமாக பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது, நிலைமையை கட்டுப்படுத்த முயன்ற விருந்தக ஊழியர் ஒருவர் ஏர் ரைபிள் துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கேகாலை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கேகாலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.