'மா ஓயாவில் குளிக்கச் சென்ற மூவர் மாயம் - ஒருவரின் உடல் மீட்பு

#SriLanka #Rescue #Missing #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
'மா ஓயாவில் குளிக்கச் சென்ற மூவர் மாயம் - ஒருவரின் உடல் மீட்பு

படல்கமவில் உள்ள 'மா ஓயா' (Ma Oya) ஆற்றில் இன்று குளிக்கச் சென்ற நால்வர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். 

அவர்களில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய மூவர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

காணாமல்போன மூவரும் பெண்களாவர். 

நான்கு இளம் பெண்கள் மற்றும் ஒரு இளைஞர் அடங்கிய குழுவினர் குறித்த பகுதிக்கு நீராடச் சென்றிருந்த நிலையில், நால்வர் பாதுகாப்பற்ற பகுதியில் நீராடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இளம் பெண்கள் ஒருவருக்கு நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டதாகவும், அவரைக் காப்பாற்ற முயன்றபோது மற்ற மூவரும் நீருக்குள் சென்று காணாமல் போனதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

 காணாமல் போனவர்கள் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் பதுளை மற்றும் ஹபுத்தளைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

அவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!