அகில இலங்கைத் தமிழ் மொழித்தினப் போட்டிகளில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி

#SriLanka #Student #Kilinochchi #Tamil #LANKA4 #L4
Prasu
2 hours ago
அகில இலங்கைத் தமிழ் மொழித்தினப் போட்டிகளில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி

தந்தையின் இழப்பு தந்த துயரத்திலும், தனது விடாமுயற்சியால் தேசிய மட்டத்தில் மீண்டும் ஒருமுறை வெற்றி முத்திரை பதித்துள்ளார் கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் மாணவி யுகதீபன் பிரதிக்சா. ​

2026ம் ஆண்டிற்கான அகில இலங்கைத் தமிழ் மொழித்தினப் போட்டிகள் பிரிவு 4க்கான சிறுகதை ஆக்கப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் கிளிநொச்சி மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார். ​

கடந்த 2024ல் தேசிய அளவில் கவிதையாக்கப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றிருந்த இவர், தற்போது தொடர் வெற்றிகள் மூலம் தன் திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.

அமரரான தந்தையின் கனவுகளை நனவாக்கும் நோக்கில் இவர் தொடரும் இந்தப் பயணம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!