கனடாவில் அதிகரிக்கும் கருணைக்கொலை மரணங்கள்
கனடாவில் மருத்துவ உதவியுடன் கூடிய கருணைக்கொலை மூலம் உயிரிழப்போரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் கணிசமாக அதிகரித்து வருகிறதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் சில பிராந்தியங்களில் பதிவாகும் மொத்த உயிரிழப்புகளில் 10ல் ஒரு மரணம் மருத்துவ உதவியுடனான தற்கொலையினாலேயே நிகழ்கிறது.
கனடா சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பூர்வமாக்கப்பட்ட ‘மருத்துவ உதவி இறப்பு திட்டம்’ மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் ஏறுமுகத்தில் உள்ளது.
நாட்டில் பதிவாகும் மொத்த மரணங்களில் சுமார் 5 சதவீதத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் இத்திட்டத்தின் மூலமே நிகழ்கின்றன. குறிப்பாகக் கியூபெக் போன்ற மாகாணங்களில் இது 7 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
புற்றுநோய் மற்றும் மீளமுடியாத கடுமையான நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களே இச்சேவையை அதிகம் நாடுகின்றனர்.