2026 இறுதியில் பதவி விலகும் சுவிஸ் ஜனாதிபதி கை பார்மலின்
2026ம் ஆண்டின் இறுதியில் ஃபெடரல் கவுன்சிலில் இருந்து விலகப் போவதாக சுவிஸ் ஜனாதிபதி கை பார்மெலின் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் அரசாங்கத்தில் அவரது 11 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ளது.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, ஃபெடரல் கவுன்சில் என்னும் ஏழு உறுப்பினர்கள் கொண்ட அமைப்பே நாட்டை ஆள்கிறது.
தனது சக கூட்டாட்சி கவுன்சிலர்களின் வாராந்திர கூட்டத்தின் போது தான் டிசம்பர் 31 அன்று பதவியை விட்டு விலகுவதாக தெரிவித்ததாக பார்மெலின் குறிப்பிட்டுள்ளார்.
66 வயதான பார்மெலின், கோடை விடுமுறையின் போது சுவிட்சர்லாந்திற்கு எது சிறந்தது என்பதைப் பற்றி யோசித்ததாகவும், 2026ம் ஆண்டின் இறுதியில் வெளியேறுவது "மிகவும் சரியான முடிவு" என்று படிப்படியாக முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் மக்கள் கட்சி அரசியல்வாதி பார்மெலின் டிசம்பர் 2015ல் பெடரல் கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2019ல் பொருளாதார விவகாரங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான கூட்டாட்சித் துறையின் பொறுப்பை ஏற்கும் முன், அவர் ஜனவரி 2016 முதல் பாதுகாப்புத் துறைக்கு தலைமை தாங்கினார்.
அவர் 2021 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தின் சுழற்சி அதிபராக இருமுறை பணியாற்றியுள்ளார்.