இந்தியாவின் திருப்பதியில் கொதிகலன் வெடித்ததில் 5 தொழிலாளர்கள் மரணம்
திருப்பதி மாவட்டம் சத்யவேடு மண்டலத்தில் உள்ள ஸ்ரீ சிட்டி சிறப்புப் பொருளாதார மண்டல (SEZ) வளாகத்தில் அமைந்துள்ள 'டிஐஎல் ஹெல்த்கேர்' (TIL Healthcare) நிறுவனத்தில், ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குறைந்தது ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்ற மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட தகவல்கள் மற்றும் ஸ்ரீ சிட்டி பிரதிநிதிகள் பலி எண்ணிக்கையை நான்கு என்று குறிப்பிட்டிருந்தாலும், திருப்பதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) எல். சுப்பராயுடு ஐந்து பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.
தகவல்களின்படி, மருந்து தயாரிப்புப் பிரிவில் (formulations manufacturing unit) இருந்த கொதிகலன் ஒன்று வெடித்துள்ளது. விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவரவில்லை.