லண்டனில் இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டவருக்கு 20 வருட சிறைதண்டனை

#CourtOrder #Attack #Prison #Israel #Embassy #London #L4
Prasu
14 hours ago
லண்டனில் இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டவருக்கு 20 வருட சிறைதண்டனை

லண்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்குள் இரண்டு கத்திகளுடன் அத்துமீறி நுழைய முயன்று பயங்கரவாதச் தாக்குதலுக்குத் திட்டமிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குவைத் நாட்டைச் சேர்ந்த அப்துல்லா அல்பாத்ரி என்பவருக்குக் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மேற்கு லண்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் எல்லைக்குள் நுழைய முயன்ற அல்பாத்ரி கைது செய்யப்பட்டார்.

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நோக்கிலேயே அல்பாத்ரி இத்தாக்குதலுக்குத் திட்டமிட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

தூதரகத்தின் அமைவிடத்தைக் கூகுளில் ஆராய்ந்தமை, இரண்டு கூர்மையான கத்திகளை வைத்திருந்தமை மற்றும் தான் உயிரிழக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிடப்பட்ட ‘தற்கொலைக் கடிதம்’ ஆகியவை நீதிமன்றத்தில் ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!