புதிதாக 30,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யத் திட்டம் – பிரதமர் அறிவிப்பு

#SriLanka #PrimeMinister #Badulla #Teacher #Harini Amarasooriya
Abi
17 hours ago
புதிதாக 30,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யத் திட்டம் – பிரதமர் அறிவிப்பு

புதிய பாடத்திட்டம் அறிமுகம்; 17,000 ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நவம்பர் 20 முதல் ஆரம்பம் எதிர்வரும் ஆண்டில் 2 மற்றும் 6ஆம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் மாநாட்டில் இன்று (18) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய ஆண்டில் முதலாம் தரத்திற்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 2 மற்றும் 6ஆம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அனைத்துப் பிள்ளைகளினதும் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய கல்வி முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பரீட்சைகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் அளிக்கும் கல்வி முறைக்குப் பதிலாக, எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளுடன் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய தலைமுறையொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

இதேவேளை, 17,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

மேலும், பல்கலைக்கழகக் கட்டமைப்பில் 2,000 விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நாட்டின் ஒட்டுமொத்த கல்விக் கட்டமைப்பிற்கும் புதிதாக சுமார் 30,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக, பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!