இலங்கையின் சுற்றுலா வருமானத்தில் வீழ்ச்சி – மத்திய வங்கி தகவல்

#SriLanka #Central Bank #Country #Tourism
Abi
17 hours ago
இலங்கையின் சுற்றுலா வருமானத்தில் வீழ்ச்சி – மத்திய வங்கி தகவல்

இலங்கை இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 2,245.2 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் இந்த வருமானம் பதிவாகியுள்ளது. எனினும், கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், சுற்றுலாத்துறை வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் 2,472.9 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டிருந்தது. இதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சுற்றுலா வருமானம் 227.7 மில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைவடைந்துள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் சுற்றுலாத்துறை மூலம் 185.6 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் பதிவான 182.9 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு செப்டெம்பர் மாத வருமானம் அதிகரித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான ஒன்பது மாத காலப்பகுதியில், மொத்தமாக 16 இலட்சத்து 93 ஆயிரத்து 679 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!