முல்லைத்தீவில் நீரில் மூழ்கி 20 வயது இளைஞன் உயிரிழப்பு
#SriLanka
#Mullaitivu
#LANKA4
#Old
Abi
14 hours ago
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட கள்ளியடி பகுதியில் உள்ள பேராற்றில் நீராடச் சென்ற 20 வயதுடைய இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்றபோதே குறித்த இளைஞன் நீரில் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்து, நீரில் மூழ்கிய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.