“நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்ட முடிவுகளை எதிர்பார்க்க வேண்டாம்” – ஜனாதிபதி அநுர

#SriLanka #government #Badulla #LANKA4 #President #AnuraKumaraDissanayake #Court
Abi
13 hours ago
“நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்ட முடிவுகளை எதிர்பார்க்க வேண்டாம்” – ஜனாதிபதி அநுர

இலங்கையில் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்ட முடிவுகளை எவரும் எதிர்பார்க்கக் கூடாது என்றும், அரசாங்கம் உயர் நீதிமன்றத்தின் தீர்மானங்களுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு செயற்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்ட மகளிர் மாநாட்டில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், முன்னர் சட்டத்தின் மூலம் சலுகைகளையும் பாதுகாப்பையும் பெற்றவர்கள், தற்போது சட்டம் தங்களுக்கு எதிராகச் செயற்படுவதாகக் கருதி எதிர்ப்புகளை வெளியிட்டு வருவதாகவும் கூறினார்.

சட்டங்களை உருவாக்குவது நாடாளுமன்றத்தின் பொறுப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி, அவற்றின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் விளக்கினார்.

அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களமும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் சட்டத்திற்கு அமைவாக வழக்குகளைத் தாக்கல் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், அந்தத் தீர்ப்பை நீக்குமாறு கோஷமிட முடியாது. ஒரு நாட்டில் சட்டம் அவ்வாறு இருக்க முடியாது” எனத் தெரிவித்த ஜனாதிபதி, நீதித்துறை வழங்கும் தீர்ப்புகளே சட்டம் தொடர்பான அதிகாரபூர்வமான முடிவுகள் என்றும், அரசாங்கம் அவற்றுக்கு உட்பட்டே செயற்படும் என்றும் வலியுறுத்தினார்.

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்ட அரசியல் தீர்மானங்களை எவரும் எதிர்பார்க்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!