பிரான்சில் உள்ள இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசனை
பிரான்சில் நிலவும் போராட்டங்களை தொடர்ந்து அங்கு வாழும் அந்நாட்டு மக்களுக்கு இந்திய தூதரகம் பாதுகாப்பு ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள், விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டங்கள் என பிரான்சில் நிலவும் அமைதியின்மை, அதைக் கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரான்சில் சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுகளைக் கருத்தில் கொண்டு, இந்தியக் குடிமக்கள் விழிப்புடனும் உரிய முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறும், போராட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் கூட்ட நெரிசலான இடங்களைத் தவிர்க்குமாறும், உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களையும் அறிவுரைகளையும் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து இடையூறுகள் குறித்து தெரிந்துகொள்ளுமாறும், உள்ளூர் செய்திகள் மூலம் நேரத்துக்கு நேரம் தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறும், பிரான்ஸ் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கவனித்துக்கொள்ளுமாறும் தன் குடிமக்களை இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.