கிம் ஜாங் உன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? வெளியான தகவல்
#China
#world_news
#NorthKorea
#LANKA4
#information
#ImportantNews
#Kim Jong Un
Abi
1 hour ago
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றதாகவும், சீனாவில் சிகிச்சை பெற்றபோது உயிரிழந்ததாகவும் அண்மையில் வதந்திகள் பரவின.
இதற்கிடையில், கிம் ஜாங் உன் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அந்நாட்டு அரச ஊடகம் புகைப்படங்களை வெளியிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இதனால், அவரது உடல்நிலை தொடர்பாகப் பரவிய வதந்திகள் சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாகின. இந்த வதந்தியை முதலில் பரப்பியது யார், அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகின் மிகவும் இரகசியமான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் வடகொரியாவில் இடம்பெறும் அரசியல் மற்றும் ஆட்சியாளர்களின் தனிப்பட்ட விவகாரங்கள் குறித்த தகவல்கள் வெளி உலகத்திற்குக் கிடைப்பது மிகவும் அரிதாகும்.