சுவிற்சர்லாந்தில் சம்பளத்தில் கழிக்கப்படும் AHV பணத்தை இலங்கைக்கு திரும்புவோர் பெற முடியுமா?

#SWITZERLAND #government #LANKA4 #SriLankan #Pension #L4
Prasu
1 hour ago
சுவிற்சர்லாந்தில் சம்பளத்தில் கழிக்கப்படும் AHV பணத்தை இலங்கைக்கு திரும்புவோர் பெற முடியுமா?

நிரந்தரமாக இலங்கை திரும்பும் இலங்கைப் பிரஜைகள், நிபந்தனைகளுடன் AHV பங்களிப்பை மீளப் பெறலாம். B/C அனுமதியைவிட குடியுரிமையும் நிரந்தர வெளியேற்றமுமே முக்கியம்.

சுவிஸிலிருந்து நிரந்தரமாக வெளியேறி இலங்கையில் குடியேறும் இலங்கைப் பிரஜைகள், நிபந்தனைகளுடன் AHV பங்களிப்பை மீளப் பெற விண்ணப்பிக்கலாம். B / C அனுமதியைவிட குடியுரிமையும் நிரந்தர வெளியேற்றமுமே முக்கியம்.

எவ்வளவு கிடைக்கும்?

  • நீங்கள் செலுத்திய AHV பங்குடன், முதலாளி செலுத்திய AHV பங்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் முழுத் தொகையும் கிடைக்கும் என்று உறுதியில்லை; கணக்கீட்டு வரம்புகள் காரணமாகக் குறைக்கப்படலாம். மீளளிக்கப்படும் தொகைக்கு மூலவரி பிடித்தமும் உண்டு.

கவனிக்க வேண்டியது: 

  • பணத்தை மீளப் பெற்ற பங்களிப்புக் காலங்களுக்கான எதிர்கால AHV/IV உரிமைகள் நீங்கும். சுவிஸ் குடியுரிமை அல்லது இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களுக்கு இதே விதி பொருந்தாது.
  • இலங்கை சென்ற பின்னர், வெளியேற்றச் சான்று (Abmeldebestätigung), கடவுச்சீட்டு, இலங்கை வசிப்பிடச் சான்று மற்றும் குடும்ப ஆவணங்களுடன், ஜெனீவாவில் உள்ள Swiss Compensation Officeக்கு விண்ணப்பிக்கலாம்

முக்கிய நிபந்தனைகள்:

  • குறைந்தது ஒரு வருடம் AHV பங்களிப்பு செலுத்தியிருக்க வேண்டும்.
  • சுவிஸை நிரந்தரமாக விட்டு வெளியேறியிருக்க வேண்டும்; விடுமுறைக்காக இலங்கை செல்வது போதாது.
  • கணவன்/மனைவி மற்றும் 25 வயதுக்குட்பட்ட பிள்ளைகளும் வெளியேற வேண்டும். சுவிஸில் தங்கும் 18–24 வயதுப் பிள்ளைகள் கல்வி அல்லது பயிற்சியை முடித்திருந்தால் விதிவிலக்கு உண்டு.

AHV பணத்தை மீளப் பெறும்போது எவ்வளவு வரி?

சுவிஸிலிருந்து நிரந்தரமாக சொந்த நாட்டுக்குத் திரும்பும் B/C அனுமதியாளர், தகுதி அடிப்படையில் CHF 100,000 AHV பணத்தை மீளப் பெற்றால், 2026 அட்டவணைப்படி: 

  • AHV தொகை: CHF 100,000
  • வரி 4.55%: CHF 4,550 
  • கிடைக்கும் தொகை: CHF 95,450

மீளப் பெறும் தகுதி குடியுரிமை மற்றும் பிற நிபந்தனைகளைப் பொறுத்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!