இஸ்ரேலின் எதிர்காலம் ஆபத்தில்.. வெல்லப்போவது யார்?
#Election
#world_news
#Israel
#LANKA4
#ImportantNews
#Future
Abi
5 hours ago
இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தனது ஆதரவாளர்கள் வாக்குப்பதிவில் போதிய ஆர்வம் காட்டாதது தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உடனடியாக நண்பர்கள் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு வாக்குச்சாவடிக்கு சென்று தனது கட்சிக்கு வாக்களிக்குமாறு பெஞ்சமின் நெதன்யாகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் நிலவுகிறது. இந்த நெருக்கடியான சூழலில், இஸ்ரேலில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
காசா போர், பிணைக்கைதிகள் விவகாரம், தற்போது ஈரனுடனான மோதல், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேலில் தேர்தல் நடப்பதால், பிரதமராக இருக்கக் கூடிய பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது.