இஸ்ரேலில் ஆட்சி மாற்றத்திற்கான முயற்சி – காடி ஐசென்கோட் புதிய அறிவிப்பு!

#PrimeMinister #world_news #government #Israel
Abi
1 hour ago
இஸ்ரேலில் ஆட்சி மாற்றத்திற்கான முயற்சி – காடி ஐசென்கோட் புதிய அறிவிப்பு!

இஸ்ரேல் பொதுத்தேர்தலின் முடிவுகளைத் தொடர்ந்து, தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சியை இழக்கக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், நெதன்யாகுவுக்கு எதிராகப் போட்டியிட்ட யஷார் (Yashar) கட்சியின் தலைவர் காடி ஐசென்கோட், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், மக்கள் பொய்களால் சலிப்படைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை நடத்துவதில் தமக்கு விருப்பமில்லை எனக் குறிப்பிட்ட அவர், அதிகளவிலான மக்கள் பங்கேற்ற தேர்தலின் முடிவுகளை மதித்து, புதிய தேர்தலைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அனைத்துச் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஏனைய கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைப்பது அரசியல் தலைவர்களின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இஸ்ரேலில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்பது நாடாளுமன்ற ஆசனப் பகிர்வு மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!