கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கப்படுமா? நீதிமன்றம் உத்தரவு!

#SriLanka #Gotabaya Rajapaksa #CourtOrder #Department #LANKA4
Abi
1 hour ago
கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கப்படுமா? நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது தொடர்பில் விளக்கமளிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி விடயங்களைத் தெளிவுபடுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (28) அறிவித்தல் விடுத்துள்ளார்.

சிங்கப்பூரிலுள்ள வைத்தியசாலையில் இதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக அந்நாட்டுக்குச் செல்ல வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டு, கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் மனுவொன்றைச் சமர்ப்பித்திருந்தனர்.

குறித்த கோரிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. வழக்கு விசாரணையின்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

எனினும், வழக்கு அழைக்கப்பட்டபோது முறைப்பாட்டுத் தரப்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் புலனாய்வு அதிகாரிகள் சிலருக்கு நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத் தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!