சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 112 சந்தேகநபர்களை 2027க்குள் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை!
சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 112 சந்தேகநபர்கள் 13 நாடுகளில் தலைமறைவாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் உதவி காவல்துறை அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
தேசிய செயல்பாட்டின் முன்னேற்றம் தொடர்பில் இன்று (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். தலைமறைவாக உள்ள சந்தேகநபர்களை 2027ஆம் ஆண்டுக்குள் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகப் பணம் ஈட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் காவல்துறையின் இரண்டு விசேட பிரிவுகள் ஊடாக 24 மணிநேரமும் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.