பருவமழை அனர்த்தங்களை எதிர்கொள்ள முன்னாயத்தக் கூட்டம் – மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில்!

#SriLanka #Meeting #government #Preparation #LANKA4 #Disaster
Abi
1 hour ago
பருவமழை அனர்த்தங்களை எதிர்கொள்ள முன்னாயத்தக் கூட்டம் – மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில்!

மாவட்டத்தில் வடகீழ் பருவமழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைக் குறைப்பதற்கான முன்னாயத்தக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் இன்று (28) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது, அவசர நிலைமைகளை எதிர்கொள்வதற்காக முப்படையினரும் காவல்துறையினரும் தேவையான உபகரணங்கள் மற்றும் மீட்புப் படகுகளுடன் தயார்நிலையில் இருக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

மேலும், வெள்ளத்தினால் மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டால், தற்காலிக தங்குமிடங்களில் உணவு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குதல், வீதித் தடைகளை விரைவாக அகற்றுதல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குதல் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அத்துடன், குளங்களில் நீர்மட்டம் அதிகரித்து மேலதிக நீர் வெளியேற்றப்படும் சந்தர்ப்பங்களில் முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் வலியுறுத்தப்பட்டது.

பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களின் பாதிப்புகளைக் குறைப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!