2027இல் விளையாட்டுத்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள் – ஜனாதிபதி அறிவுறுத்தல்!

#SriLanka #Meeting #LANKA4 #President #sports #AnuraKumaraDissanayake
Abi
1 hour ago
2027இல் விளையாட்டுத்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள் – ஜனாதிபதி அறிவுறுத்தல்!

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, சர்வதேச மட்டத்தில் வெற்றிபெறக்கூடிய விளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்குவதுடன், நாட்டில் விளையாட்டுக் கலாசாரத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இலங்கை விளையாட்டு வீரர்களின் திறமைகளை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தும் நோக்கில் தேசிய உயர் செயல்திறன் மையத்தை நிறுவுதல், அனுராதபுரத்தில் 400 மீற்றர் செயற்கை ஓடுதளத்தை அமைத்தல், தியகம சர்வதேச விளையாட்டு அரங்கின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அபிவிருத்தி செய்தல் மற்றும் சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டன.

மேலும், விளையாட்டு மருத்துவ நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இணைந்து விளையாட்டு, உடற்பயிற்சி தொடர்பான ஆராய்ச்சிகளை முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

2027ஆம் ஆண்டில் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கையின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தி, சர்வதேசப் போட்டிகளில் நாட்டின் வெற்றிவாய்ப்புகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!