மீன் தொட்டிக்குள் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு!
#SriLanka
#Death
#Police
#Investigation
#baby
Thamilini
3 hours ago
உடப்பு, கொத்தாந்தீவு பகுதியில் நேற்று (31) காலை வீட்டின் முன்பாக இருந்த மீன் தொட்டிக்குள் தவறி வீழ்ந்து பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மீன் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெரியபாடு, கொத்தாந்தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு வருடமும் 4 மாதங்களும் வயதுடைய பெண் குழந்தையே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளது.
மேலும், சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.