இலங்கை கடற்பரப்பில் அத்துமீறல் - 07 தமிழக மீனவர்கள் கைது!
#SriLanka
#Mannar
#Tamil Nadu
#ARREST
#Fisherman
#LANKA4
Thamilini
2 hours ago
தலைமன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 7 தமிழக மீனவர்கள் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று காலை இடம்பெற்றுள்ளது.
தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பிற்குள் கடற்படையினர் விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது இந்த அத்துமீறல் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான தமிழக மீனவர்கள் தலைமன்னார் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னாரிலுள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.