காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்பு!

#SriLanka #Fisherman #LANKA4 #Missing #Safety
Abi
2 hours ago
காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்பு!

குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி கடற்றொழிலுக்காகக் கடலுக்குச் சென்று காணாமல் போயிருந்த நான்கு கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த கடற்றொழிலாளர்களைத் தேடும் நடவடிக்கையில் இலங்கை கடற்படை, கடலோரக் காவல்படை, விமானப்படை மற்றும் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஏனைய மீன்பிடிப் படகுகளும் இணைந்து செயற்பட்டுள்ளன.

இதற்கமைய, கடந்த முதலாம் திகதி பொத்துவில் கடற்கரையிலிருந்து சுமார் 200 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில், ஹேஷக சுதா (IMUL-A-0658-KLT) என்ற பலநாள் மீன்பிடிப் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, இலங்கை கடற்படைக் கப்பலான சிதுரல உள்ளிட்ட தரப்பினர் முன்னெடுத்த ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின் மூலம் படகும் அதிலிருந்த நான்கு கடற்றொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட நான்கு கடற்றொழிலாளர்களும் தற்போது இலங்கை கடற்படைக் கப்பலான சிதுரல மூலம் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டுவரப்பட்டு வருவதாகக் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!