சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – விவாதம் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம்!
#SriLanka
#Parliament
#Protest
#LANKA4
#Member
Abi
1 hour ago
சபாநாயகருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எவ்வித தாமதமுமின்றி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.