இஸ்ரேலுக்கான வருடாந்திர 4 பில்லியன் டாலர் உதவியை நிறுத்தும் அமெரிக்கா
#America
#Weapons
#Israel
#LANKA4
#Aid
#Agreement
#Netanyahu
#L4
#DonaldTrump
Prasu
44 minutes ago
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும் அதன்படி இந்த ஆண்டின் இறுதிக்குப் பிறகு இஸ்ரேலுக்கு அமெரிக்கா ராணுவ உதவியை வழங்காது என்றும் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கு இனி இத்தகைய உதவி தேவையில்லை என்றும் சில ஜனநாயகக் கட்சியினரும் இடதுசாரி அரசியல்வாதிகளும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் இந்த நிதியுதவியை வைத்து குடியரசுக் கட்சியினரைக் விமர்சித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
"இஸ்ரேலுக்கு நிதி வழங்குவது குறித்து, பெஞ்சமின் நெதன்யாகுவும் நானும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம். தற்போது ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் வழங்கி வருகிறோம், ஆனால் இதை நிறுத்துவது குறித்து சில மாதங்களுக்கு முன்பே நாங்கள் ஒப்பந்தம் செய்துகொண்டோம்" என்று டிரம்ப் தெரிவித்தார்.