இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 19.8 கிலோ ஹஷீஷ் போதைப்பொருள் தமிழகத்தில் மீட்பு!

#India #SriLanka #Tamil Nadu #ARREST #Police #Investigation #drugs
Lakhi
2 hours ago
இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 19.8 கிலோ ஹஷீஷ் போதைப்பொருள் தமிழகத்தில் மீட்பு!

இலங்கைக்குக் கடத்தத் திட்டமிடப்பட்டிருந்த 19.8 கிலோ ஹஷீஷ் போதைப்பொருள் இந்தியாவின் தமிழ்நாடு, ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் அருகே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாசிப்பட்டினம் பாசியம்மன் கோவில் கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர் ஒருவரிடமிருந்து முதலில் 2 கிலோ ஹஷீஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மேலும் 17.8 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, திருவாடானை தளிர் மருங்கூர் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய மனோ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னர் பதிவு செய்யப்பட்ட 15 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த இவர், தற்போது மீண்டும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மூலாதாரம், இலங்கைக்குக் கடத்துவதற்கான திட்டம் மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய நபர்கள் குறித்து இந்தியப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!