அமெரிக்க செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் குடியரசுக் கட்சி நிராகரிப்பு

#Election #America #people #government #LANKA4 #Vote #L4 #DonaldTrump
Prasu
3 hours ago
அமெரிக்க செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் குடியரசுக் கட்சி நிராகரிப்பு

அமெரிக்க செனட் சபையை ஜனநாயக கட்சி கைப்பற்றி ட்ரம்பின் குடியரசுக் கட்சியை மக்கள் நிராகரித்துள்ளார்கள். இது எதிர்பாராத நெருக்கடியையும் பின்னடைவையும் அதிபர் ட்ரம்புக்கு கொடுத்துள்ளது.

அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் இடைக்கால தேர்தல் எனப்படும்.

இந்த தேர்தலில் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவதில்லை மாறாக நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

இந்நிலையில் செனட் சபையை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கைப்பற்றியுள்ளது. இதுபோல் , மக்கள் பிரதிநிதிகள் சபையிலும் கூடுதலான ஆசனங்களை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பெற்று முன்னிலையில் உள்ளது.

இதனால் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிகார சமநிலை மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ட்ரம்பின் எஞ்சிய ஆட்சிக் காலம் அவருக்கு நெருக்கடியை தரும் காலமாகவே இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தி: NT ஜெகன் - பாரிஸ்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!