வவுனியா பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் குறித்து நீதிமன்ற தீர்ப்பு

#Vavuniya #ARREST #Police #CourtOrder #drugs #LANKA4 #release #L4
Prasu
1 hour ago
வவுனியா பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் குறித்து நீதிமன்ற தீர்ப்பு

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இளைஞர் ஒருவர் பொலிஸாரால் வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், வவுனியா நீதவான் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் மற்றும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஆனால், பொலிஸார் தன்னைத் தாக்கியதாகக் கூறிய அந்த இளைஞன் அவர்களுடன் முரண்பட்டார். இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரவற்பரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். 

வவுனியா பொது மருத்துவமனையில் பெறப்பட்ட அவரது மருத்துவ அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. 

மருத்துவ அறிக்கையின்படி, அவர் எந்தவிதமான போதைப்பொருளையும் பயன்படுத்தவில்லை என்பது நிரூபணமானது. 

மேலும், அவரது உடலில் அடிகாயங்கள் இருப்பதாகவும் மருத்துவ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இவற்றை ஆராய்ந்த நீதவான், இளைஞரை பிணையில் விடுவித்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!