கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்தியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

#SriLanka #Kilinochchi #Hospital #doctor #LANKA4
Mahathi
2 hours ago
கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்தியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று நண்பகல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவர்களின் நீண்டகால சம்பள உயர்வு கோரிக்கையை நிறைவேற்றுதல், பொருளாதார நெருக்கடியின்போது குறைக்கப்பட்ட மேலதிக பணி மற்றும் விடுமுறைக்காலக் கொடுப்பனவுகளை மீண்டும் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், தங்குதடையின்றி மருந்துகளை வழங்குதல் மற்றும் வைத்தியசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சுகாதார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காமையும் இந்தப் போராட்டத்திற்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று முதல் நாடளாவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக இன்று கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் கதிரமலை உமாசுதன் உள்ளிட்ட பல வைத்தியர்கள் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!