நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – தனியார் நிறுவனங்களின் விநியோகக் குறைப்பால் வரிசைகள்!
நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், எரிபொருள் விநியோகத்தில் எவ்விதப் பற்றாக்குறையும் இல்லை எனவும் இலங்கை கனிமவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
எனினும், சில தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் நட்டம் ஏற்படுவதாகக் கூறி தமது விநியோக அளவைக் குறைத்துள்ளமையே சில பகுதிகளில் எரிபொருள் வரிசைகள் உருவாகக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்குத் தீர்வாக, சிபெட்கோ (Ceypetco) எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இல்லாத 52 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கி எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனியார் நிறுவனங்கள் குறைத்துள்ள எரிபொருள் விநியோக அளவை சிபெட்கோ ஊடாக ஈடுசெய்து வருவதாகவும், நாட்டின் எரிபொருள் விநியோகம் வழமைபோன்று முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சில பகுதிகளில் சிறியளவிலான எரிபொருள் வரிசைகள் காணப்பட்டாலும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.