இலங்கை – இந்தியா முதலாவது ஒருநாள் போட்டியின் மைதானம் மாற்றம்!

#India #SriLanka #International #LANKA4 #Cricket #sports
Abi
1 hour ago
இலங்கை – இந்தியா முதலாவது ஒருநாள் போட்டியின் மைதானம் மாற்றம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப்பயணத்தின்போது நடைபெறவுள்ள முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின் மைதானம் மாற்றப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள இச்சுற்றுப்பயணத்தில், இரு அணிகளுக்கும் இடையே மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளும், மூன்று இருபதுக்கு 20 போட்டிகளும் நடைபெறவுள்ளன.

இதன்படி, டிசம்பர் 13ஆம் திகதி டெல்லியில் நடைபெறவிருந்த முதலாவது ஒருநாள் போட்டி தற்போது விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

டெல்லியில் நிலவக்கூடிய கடுமையான வளிமாசடைவு மற்றும் அங்குள்ள கிரிக்கெட் மைதானத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புனரமைப்புப் பணிகள் காரணமாக, போட்டியை வேறு இடத்திற்கு மாற்றுமாறு டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (DDCA) கோரிக்கை விடுத்திருந்தது.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கிரிக்கெட் வாரியம், முதலாவது ஒருநாள் போட்டியை டெல்லிக்குப் பதிலாக விசாகப்பட்டினத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!