191 கொலைகளை செய்த கென்ய மதத் குழு தலைவருக்கு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை
கிழக்கு ஆப்பிரிக்க நாட்டை உலுக்கிய, 190 குழந்தைகள் உட்பட 191 பேர் உயிரிழந்த வழக்கில், சர்ச்சைக்குரிய மதக்குழுத் தலைவர் பால் மெக்கன்சிக்கு கென்ய நீதிமன்றம் மொத்தம் 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குட் நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச் என்ற அமைப்பை வழிநடத்திய முன்னாள் போதகரான மெக்கன்சிக்கு, 190 குழந்தைகளின் மரணத்திற்காக 100 ஆண்டுகளும் ஒரு வயது வந்தவரின் மரணத்திற்காக மேலும் 100 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தென்கிழக்கு கென்யாவின் ஷகஹோலா காட்டில் நடந்த மரணங்கள் குறித்து, 191 கொலைக் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தண்டனை வழங்கப்பட்டது.
நோன்பு இருந்தால் இயேசு கிறிஸ்துவிடம் நெருங்கிச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையில், மெக்கன்சி தனது பின்பற்றுபவர்களை உணவைத் துறக்கவும் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பட்டினி போடவும் தூண்டியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர்.