வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு தேசிய வைத்தியசாலை: பணிகள் மீண்டும் வழமைக்குத் திரும்பின!
#SriLanka
#Colombo
#Hospital
#LANKA4
#Flood
#national
Abi
21 minutes ago
நேற்று கொழும்பில் பெய்த கடும் மழை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சில கட்டிடங்களின் கீழ்தளங்களில் வெள்ளநீர் புகுந்ததால் வைத்தியசாலைப் பணிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று காலை முதல் வெள்ளநீர் முற்றாக வெளியேற்றப்பட்டு, வைத்தியசாலையின் அனைத்துப் பணிகளும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
வைத்தியசாலை ஊழியர்களின் ஒத்துழைப்புடன் வெள்ளநீர் முழுமையாக அகற்றப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுத்தப்படுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நேற்று கொழும்பின் பல்வேறு பகுதிகளில் பெய்த அடைமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன்போது கொழும்பில் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.