கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் இந்திய வர்த்தகர் கைது!
#SriLanka
#ARREST
#Investigation
#drugs
#Indian
Mithra
13 minutes ago
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 23 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் 37 வயதுடைய இந்திய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 2.102 கிலோகிராம் குஷ் (Kush) மற்றும் 5.26 கிலோகிராம் ஹஷீஸ் (Hashish) ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.