தீபாவளியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை!
#SriLanka
#School
#Festival
#LANKA4
#DIwali
Mithra
45 minutes ago
நாட்டில் நாளை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, மத்திய, ஊவா, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் விசேட கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவுறுத்தல்கள் குறித்த மாகாண ஆளுநர்களால் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. விசேட
விடுமுறைக்கு பதிலாக, எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை குறித்த பாடசாலைகளில் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.