விரும்பிய விலைக்கு எரிபொருள் விற்பனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி!

#SriLanka #prices #LANKA4 #Private
Abi
29 minutes ago
விரும்பிய விலைக்கு எரிபொருள் விற்பனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி!

இலங்கையில் செயற்படும் தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள், ஒக்டேன் 95 பெட்ரோல் மற்றும் சூப்பர் டீசல் ஆகியவற்றைத் தாங்கள் விரும்பிய விலைக்கு விற்பனை செய்ய தற்போதைய ஒப்பந்தங்களின்படி சட்டரீதியான தடைகள் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய எரிபொருள் விலைச் சூத்திரத்தினால் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறி, சில தனியார் நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (சிபெட்கோ) எரிபொருள் நிலையங்கள் இல்லாத தொலைதூரப் பகுதிகளில் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைக் கருத்திற்கொண்டு, சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் இல்லாத 52 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அப்பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்க தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் விநியோகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் குறைவடைந்தால், அதன் நன்மையை உள்நாட்டு நுகர்வோருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!