மீண்டும் திரையில் தோன்றும் விஜய்? ரசிகர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி செய்தி!

#India #Tamil Nadu #LANKA4 #Vijay #ChiefMinister
Mithra
34 minutes ago
மீண்டும் திரையில் தோன்றும் விஜய்? ரசிகர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி செய்தி!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய், தமிழக அரசின் சார்பில் தயாரிக்கப்படவுள்ள விளம்பரமொன்றில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'ஜனநாயகன்' திரைப்படமே தனது கடைசித் திரைப்படம் என விஜய் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அவர் மீண்டும் திரையில் தோன்றவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறித்த விளம்பரத்தை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான படப்பிடிப்பு இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத ஆரம்பத்திலோ நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!