இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியா வழங்கிய புதிய சலுகை: கடவுச்சீட்டு, விசா விதிகளில் தளர்வு!

#India #SriLanka #government #Passport #LANKA4 #Visa
Abi
31 minutes ago
இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியா வழங்கிய புதிய சலுகை: கடவுச்சீட்டு, விசா விதிகளில் தளர்வு!

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு கடவுச்சீட்டு மற்றும் விசா தொடர்பான விதிகளில் இந்திய மத்திய அரசு முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது.

இந்திய மத்திய உள்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) (திருத்த) உத்தரவு – 2026 ஊடாக இந்த புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 2015 ஜனவரி 9ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இந்தியாவுக்கு வருகை தந்து, அகதிகளாகப் பதிவுசெய்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு கடுமையான கடவுச்சீட்டு விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடவுச்சீட்டு ஆவணங்கள் தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்ளும் இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவில் தொடர்ந்து தங்குவதற்கும், வதிவிட அனுமதி தொடர்பான நடைமுறைகளை இலகுவாகப் பூர்த்தி செய்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மதத் துன்புறுத்தல் காரணமாக 2024 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த சிறுபான்மைச் சமூகத்தினருக்கும், திபெத்திய அகதிகளுக்கும் இதேபோன்ற விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 2009 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தானியர்கள், தேசிய அடையாள அட்டை (CNIC) இல்லாத காரணத்தால் கடவுச்சீட்டை புதுப்பிக்க முடியாத நிலையில் இருந்தால், குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் அவர்களுக்கும் விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீண்டகாலமாகத் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் உள்ளிட்ட வெளிநாட்டினரின் ஆவணச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இந்தப் புதிய திருத்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!