கனடாவில் அனுமதி பெற்றுள்ள இரண்டு புதிய தடுப்பூசிகள்

#Covid 19 #CANADA #government #LANKA4 #Vaccine #L4
Prasu
37 minutes ago
கனடாவில் அனுமதி பெற்றுள்ள இரண்டு புதிய தடுப்பூசிகள்

மொடர்னா நிறுவனத்தின் இன்ஃபுளுவென்சா காய்ச்சலுக்கான புதிய எம்.ஆர்.என்.ஏ(mRNA) தடுப்பூசிக்கும், இன்ஃபுளுவென்சா மற்றும் கோவிட்-19 ஆகிய இரண்டிற்கும் எதிரான ஒருங்கிணைந்த எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிக்கும் கனடாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரு தடுப்பூசிகளும் 50 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கும் பயன்படுத்துவதற்காக கனடிய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

எனினும், தற்போதைய சுவாச நோய் பரவல் பருவத்தின் போது இந்தத் தடுப்பூசிகள் மருந்தகங்களை வந்தடையாது என மொடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு பயன்பாட்டிலுள்ள mRNA அல்லாத சாதாரண இன்ஃபுளுவென்சா தடுப்பூசியை, 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும் பெற்றுக்கொள்ளுமாறு நோயெதிர்ப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு (NACI) பரிந்துரைக்கிறது.

இவ்வாண்டில் கனடாவில் மொடர்னா மற்றும் பைசர் ஆகிய இரு நிறுவனங்களின் கோவிட்-19 எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!