ருவன்வெலிசாய போராட்டத்தில் ஈடுபட்ட 5 பிக்குகளுக்கும் நவம்பர் 20ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவு!

#SriLanka #Protest #Department #Anuradapura #Development #Project #Monk #Court
Abi
27 minutes ago
ருவன்வெலிசாய போராட்டத்தில் ஈடுபட்ட 5 பிக்குகளுக்கும் நவம்பர் 20ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவு!

அநுராதபுரம் ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வண. பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பிக்குகளும் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அநுராதபுரம் பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய, குறித்த ஐந்து பிக்குகளும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டியுள்ளது. அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தேசிய பௌதீகத் திட்டமிடல் திணைக்களத்தினால் 2026 பெப்ரவரி 27ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு எதிராகவே பிக்குகள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக, ருவன்வெலிசாய தூபியைச் சுற்றிப் பாதுகாப்பு வேலி அமைத்தல், பௌத்த மதச் செயற்பாடுகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற அச்சம் மற்றும் புதிய மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சந்தேகங்கள் உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து அவர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!