வீட்டிலேயே சுவையான சிக்கன் பிரைட் ரைஸ்

வீட்டிலேயே சுவையான சிக்கன் பிரைட் ரைஸ்

இன்றைய அவசர உலகத்தில் சமைப்பதற்கும் கூட சிலருக்கு நேரமில்லை. நிறைய மக்கள் இரவு நேரங்களில் தங்களின் வேலையை குறைப்பதற்காக ரோட்டு கடைகளில் சமைக்கும் உணவினை வாங்கி சாப்பிடுகிறார்கள். அதிலும் பாஸ்ட் புட் கடைகளில் கிடைக்கும் ஃபிரைட் ரைஸை குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுகிறார்கள். இந்த உணவினை உண்பதால் குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. சில சமயங்களில் இவ்வாறான உணவுகள் பல உடல் உபாதைகளையும், மரணத்தையும் கூட ஏற்படுத்துகின்றன. இவ்வாறு தீங்கு விளைவிக்கும் ஃப்ரைட் ரைஸை கடையில் வாங்காமல் அதே சுவையில் எப்படி வீட்டில் செய்யலாம் என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

  • பிரியாணி அரிசி – ஒரு கிலோ,
  • முட்டை – 5,
  • வெங்காயம் – 150 கிராம்,
  • இஞ்சி சிறிய துண்டு – 2,
  • பூண்டு – 15 பல்,
  • பீன்ஸ் – 100 கிராம்,
  • கேரட் – 50 கிராம்,
  • வெங்காயத் தாள் – ஒரு கொத்து,
  • பச்சை மிளகாய் – 7,
  • மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன்,
  • மிளகுத் தூள் – 2 ஸ்பூன்,
  • உப்பு – ஒன்றரை ஸ்பூன்.
  • சிக்கன் வறுவல்: ஒரு கிலோ கோழி கறியுடன் முட்டை ஒன்று,
  • தயிர் ஒரு ஸ்பூன்,
  • இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன்,
  • மிளகாய்தூள் ஒரு ஸ்பூன்,
  • சோள மாவு அரை ஸ்பூன்,
  • அரிசி மாவு அரை ஸ்பூன்,
  • உப்பு அரை ஸ்பூன்

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து விட்டு 15 நிமிடங்கள் நன்றாக ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஊற வைத்துள்ள சிக்கனை பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஃப்ரைட் ரைஸ் செய்முறை:

ஒரு பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்து அதில் முக்கால் பங்கு தண்ணீர் வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் பிரியாணி அரிசியை கழுவி அதனுள் போட வேண்டும். பின்னர் 5 நிமிடங்களில் சாதம் பாதி அளவு வெந்து விடும். அப்பொழுது சாதத்தினை இறக்கி வடித்து விட வேண்டும். அதன் பிறகு வெங்காயம், கேரட், பீன்ஸ், வெங்காயதாழ், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போன்ற பொருட்களை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின் ஒரு பெரிய கடாயை அடுப்பின் மீது வைத்து 150 கிராம் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி அதனுடன் வெங்காயதாழினையும் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கேரட் மற்றும் பீன்ஸையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொண்டு பிறகு இவற்றுக்குத் தேவையான உப்பினையும் சேர்க்க வேண்டும். பிறகு இவற்றுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கிளறிக்கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் எண்ணெயில் நன்றாக வதங்கிய பின்னர் வறுத்து வைத்துள்ள சிக்கனை பொடியாக நறுக்கிக் கொண்டு இதனுடன் சேர்த்து ஒருமுறை வதக்கிக் கொள்ள வேண்டும். இறுதியாக இவற்றுடன் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அவ்வளவு தான். நீங்கள் கடைகளில் வாங்கும் பிரைட் ரைஸ் வீட்டிலேயே தயாராகிவிட்டது.

ஒருமுறை வீட்டிலேயே ஃப்ரைட் ரைஸை இவ்வாறு சமைத்துப் பாருங்கள். இதன் சுவையை சுவைத்தவர்கள் இனி கடைகளுக்குச் சென்று ஃபிரைட் ரைஸ் வாங்குவதையே நிறுத்தி விடுவீர்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!