இரண்டு தடுப்பு மருந்துகளை இந்தியாவில் கலந்து செலுத்த அனுமதி!

Reha
4 years ago
இரண்டு தடுப்பு மருந்துகளை இந்தியாவில் கலந்து செலுத்த அனுமதி!

கொரோனா வைரசுக்கு எதிரான பெரும்பாலான தடுப்பூசிகள் 2 தவணைகள் செலுத்த வேண்டிய தடுப்பூசிகளாகவே இருக்கின்றன. ஒரு தடுப்பூசியை முதல் தவணை செலுத்தி, குறிப்பிட்ட இடைவெளிக்கு பின்னர் அதே தடுப்பூசியை 2-வது தவணை செலுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் இதே முறையில்தான் செலுத்தப்படுகின்றன.

முதல் தவணையில் ஒரு தடுப்பூசியையும், 2-வது தவணையில் மற்றொரு தடுப்பூசியையும் யாரும் இங்கு பரிந்துரைப்பதில்லை. இதுகுறித்த ஆய்வுகள் வெளிநாடுகளில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் முதல் தவணையிலும், 2-வது தவணையிலும் வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்துகிறபோது, குறிப்பாக கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்துகிறபோது அது பாதுகாப்பானது மட்டுமல்ல, கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பான பலனை, அதாவது நோய் எதிர்ப்பு சக்தியைத்தருகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம்  இன்று அனுமதி அளித்துள்ளது. இரு வகையான தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தினனால் நல்ல பயன் தரும் என ஐ.சி.எம்.ஆர். வெளியிட்ட அறிக்கையை அடுத்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆனையம் அனுமதி வழங்கியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4