ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை - பயங்கரவாதி சுட்டுக்கொலை

Reha
4 years ago
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை - பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு உள்ள கட்டிடம் ஒன்றில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். தொடர்ந்து கட்டிடத்தில் வேறு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா? என பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4