பனீர் கிரேவி வெந்தய கீரையுடன் சமையுங்கள்

 பனீர் கிரேவி வெந்தய கீரையுடன் சமையுங்கள்

இன்று பகல் டிபனுக்கு என்ன உணவு செய்யலாம்? அதற்கு என்ன சைடிஷ் செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படி என்றால் இந்த வெந்தயக்கீரை, பன்னீர் கிரேவியை செய்து அசத்துங்கள். நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும், மிகவும் கிரீமியான இந்த கிரேவியை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

வெந்தய கீரை பன்னீர் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

  • பன்னீர் சிறிய துண்டுகளாக நறுக்கியது – ஒரு கப்,
  • உலர்ந்த வெந்தய கீரை – 2 ஸ்பூன்,
  • பெரிய வெங்காயம் –1,
  • பச்சை மிளகாய் – 4,
  • முந்திரி – 12,
  • நெய் – 2ஸ்பூன்,
  • சோம்பு –1 ஸ்பூன்,
  • சர்க்கரை – அரை ஸ்பூன்,
  • தயிர் – அரை கப்,
  • ஃப்ரஷ்க்ரீம் – அரை கப்,
  • கரம்மசாலா – ஒரு ஸ்பூன்,
  • கொத்தமல்லி – ஒரு கொத்து,
  • உப்பு – ஒன்றரை ஸ்பூன்.

செய்முறை:

  1. அடுப்பின் மீது கடாயை வைத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் ஒரு வெங்காயத்தை நான்கு துண்டுகளாக அரிந்து சேர்க்க வேண்டும்.
  2. அதனுடன் பச்சைமிளகாய் மற்றும் முந்திரியை சேர்க்க வேண்டும்.
  3. இவை மூன்றும் நன்றாக வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.
  4. பின்னர் அடுப்பை அனைத்து குளிர வைக்க வேண்டும்.
  5. அதன் பின் இவற்றை மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  6. பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியில் நெய் சேர்த்து அதில் சோம்பு சேர்த்து தாளித்து அதனுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்டை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
  7. பிறகு இவற்றுடன் உப்பு, சர்க்கரை, கரமசாலா இவை மூன்றையும் சேர்த்து, கலந்துவிட்டு அடுப்பை சிறிய தீயில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
  8. பின்னர் இவற்றில் பன்னீரை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
  9. அதன் பிறகு இவற்றுடன் தயிரையும் சேர்த்து நன்றாக பிரட்டிவிட வேண்டும்.
  10. இறுதியாக வெந்தயக்கீரையை கையினால் நசுக்கி அதனுள் சேர்க்கவேண்டும்.
  11. அவற்றுடன் பிரஷ் க்ரீம் மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி வைக்க வேண்டும்.
  12. இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள வெந்தயக்கீரை பன்னீர் கிரேவியை,. இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதற்கும் நன்றாகவே இருக்கும். இவற்றில் காரம் குறைவாக இருப்பதால் குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதில் சேர்த்துள்ள க்ரீம், தயிர் போன்றவற்றின் சுவை பன்னீருடன் சேர்ந்து நல்ல சுவையில் இருக்கும். ஒருமுறை செய்து கொடுங்கள் பலன் உங்களுக்கே தெரியும்.

பன்னீர் பயன்கள்:

பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரில், பாலில் இருப்பதைவிட சர்க்கரையின் அளவு குறைவாகவே இருக்கும். பன்னீரில் உடலுக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ், கொழுப்பு சத்துகள் நிறைந்திருக்கிறது. பன்னீரை குறைந்த அளவு சாப்பிட்டாலே வயிறு முழுவதும் சாப்பிட்டது போன்ற திருப்தி ஏற்படும். இது குழந்தைகளின்ன் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!